×

டைப்-2 நீரிழிவுக்கு உணவே மருந்து: ஆய்வில் தகவல்

துபாய்: உலகம் முழுவதும் சர்க்கரை நோயை மருந்தில்லாமல் கட்டுப்படுத்துவது குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் டிசைட் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட டைப் 2 சர்க்கரை நோய் குறித்த‌ 12 வார ஆய்வின் ஒரு பகுதியாக  குறைந்த கலோரி, குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரதம் அடங்கிய  உணவுகள்  ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையைக் குறைத்தால் டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைந்து கட்டுப்பட்டுக்குள் வரும் என ஆய்வில் தெரியவந்தது. உடல் எடையை குறைக்கும்போது இன்சுலின் சுரப்பு சீராகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தபடுவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் டைப் 2 நீரிழிவின் பாதிப்பில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

ஏற்கனவே சில ஆய்வுகளில் உணவுக் கட்டுப்பாடு மூலம் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்கலாம்  என தகவல்கள் உள்ளது. இதனை மேலும் உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவை ருசித்தால் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவது குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரையும் கண்காணிப்பும் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Diet for type-2 diabetes: study information
× RELATED ஆப்கனில் வெள்ளத்தில் 68 பேர் பலி